Sri LakshmiNarayana Perumal Temple :

  பாரத தேசம் முழுமையையும், கிழக்கும் மேற்குமாகவும், வடக்கும் தெற்குமாகவும் ஆயிரமாயிரம் திருக்கோயில்கள் அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கருத்தாக்கம் உண்டென்றும், பாரத தேசத்திற்கு மதம் (சனாதன தர்மம்) என்பதே அந்தக் கருத்தாக்கம் என்றும் ஸ்வாமி விவேகானந்தர் கூறுவார். நம்முடைய திருக்கோயில்கள் நம்முடைய கலாசாரத்தின் பிரதிபிம்பமாய், காவலனாய் விளங்கி வருகின்றன. அத்தகைய திருக்கோயில்களில் பன்னெடுங்காலமாய் ஆட்சி புரிந்து பின்னர் கால ஓட்டத்தில் கவனிப்பாரின்றி சிதிலமடைந்த கோயில்கள் பல்லாயிரம். அவற்றுள் ஒன்று தான் மேல்வெண்பாக்கம் ஸ்ரீலக்ஷ்மீநாராயணப் பெருமாள் திருக்கோயில்.

  இங்கு மூலவர் ஸ்ரீலக்ஷ்மீநாராயணப் பெருமாள். மஹாலக்ஷ்மீ தாயார்.​

  இங்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத கல்யாண கோவிந்தராஜப் பெருமாள்.

  பெருமாளின் ஜன்ம நக்ஷத்ரம் உத்ராடம்.

  வைகானச ஆகமம்.

  வடக்கு நோக்கிய திருச்சேவை. நித்ய சொர்க்க வாசல்.

  பெருமாள் ஸ்வயம் திருமேனி.

  சாளக்ராம திருமேனி.

  மஹா பக்த ஹனுமன் ஸ்வாமி மூன்று மண்டலங்கள் தவம் புரிந்த க்ஷேத்ரம். எப்பேர்ப்பட்ட கொடிய தோஷத்தையும் போக்கும் ஸர்வ தோஷ நிவ்ருத்தி க்ஷேத்ரம்.

  தாயாரும் பெருமாளும் ஐக்கிய பாவத்தில் சேவை. இதன் தாத்பர்யம் என்னவென்றால் மன ஒற்றுமை இல்லாத தம்பதியர் இந்த திவ்ய தம்பதியை வழிபட்டால், மன வேற்றுமை விலகி மன ஒற்றுமையும் அன்யோன்யமும் கை கூடும் என்பது ஐதீகம்.

  பெருமாள் தன் திருமார்பில் ஆதிசேஷனையே வைஜயந்தி மாலையாய் சூடிய அதிசயம். ஆதிசேஷன் தனக்கு ஆற்றும் திவ்ய கைங்கர்யத்தில் மனமகிழ்ந்து அவருக்கு ஒரு ஏற்றம் தர எண்ணி அவரைத் தன் திருமார்பிலேயே சூடியிருக்கிறார் மேல்வெண்பாக்கம் பெருமாள். இதனால் நம்மை சூழ்ந்துள்ள ராகு, கேது, கால, அங்காரக மற்றும் சர்ப்ப தோஷங்களிலிருந்து நாம் விமோசனம் பெறலாம் என்பது ஐதீகம்.

  எங்கும் இல்லாத அதிசயமாய் தாயார் இங்கு பெருமாளின் திருத்தொடையிலே தன் வலது திருக்கையை ஊன்றி ஸ்வதந்திர லக்ஷ்மியாய் திருச் சேவை.

  ஸ்ரீசூக்த ஸ்ரீமந்த்ரமே இங்கு தாயார் வடிவில் வீற்றிருப்பதாக ஐதீகம்.

  அஷ்டலக்ஷ்மிகளும் ஒருமுகப்பட்டு ஒரு லக்ஷ்மியாய், மஹாலக்ஷ்மியாய் ஸேவை ஸாதிப்பதாக ஐதீகம்.

  காஞ்சி மஹாபெரியவா இந்தப் பெருமாள் தாயாரின் பேரழகில் ஈர்க்கப்பட்டு, சன்னதிக்குப் பக்கத்தில் இருந்த உபநிஷத் ப்ரம்மேந்திர மடத்தில் தங்கி அடிக்கடி பெருமாள் தாயாரை தரிசித்து மகிழ்ந்ததாக வரலாறு. 1957ம் ஆண்டு, மஹாபெரியவா மூன்று நாட்கள் இந்தத் திருச்சன்னிதியிலேயே இருந்ததாக இவ்வூர் மக்கள் பெருமையுடன் நினைவு கூறுவர்.

  பிரதி மாதம் உத்ராட திருநக்ஷத்திரத்தன்று மிகவும் பவித்ரமான ஸ்ரீலக்ஷ்மீநாராயண நவ கலச ஹோமம் நடைபெறும். இதில் கலந்து கொள்வதினால் நம் வாழ்க்கையிலுள்ள அமங்கலங்கள் எல்லாம் விலகி மங்களங்களை நிரப்பச் செய்யக்கூடிய ஹோமம். எப்பேர்ப்பட்ட கொடிய தோஷத்தினாலும் ஏற்பட்ட சந்தான பாக்கியமின்மை, விவாஹ ப்ராப்தியின்மை, தாம்பத்ய அன்யோன்யக் குறைவு ஆகிவை நீங்கி, நல்ல வரங்களை நல்கும் மகத்தான புண்ய பலன்களைத் தரக் கூடிய ஹோமம். மிக முக்கியமாக, குழந்தைப்பேறு வேண்டி வரும் தம்பதியருக்காக, ஸ்ரீலக்ஷ்மீநாராயண ஹ்ருதய மந்த்ரத்தில் ஜபிக்கப்பட்ட பால் பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். மேலும், இதில் 64 மிக அரிய மூலிகைகளைக் கொண்டு ஹோமம் செய்யப்படுவதால், நாள்பட்ட தீராத வியாதிகள் தீர்வது அனுபவம். காலை எட்டு மணியிலிருந்தே பொங்கல் பிரசாதம் வழங்கப்படும். மதியம் இரண்டு மணி சுமாருக்கு ஹோமம் முற்றுப் பெறும். பிரசாதமும் வழங்கப்படும்.

  பிரதி வெள்ளிக்கிழமை குழந்தைப்பேறு வேண்டி வரும் தம்பதியருக்காக, ஸ்ரீலக்ஷ்மீநாராயண ஹ்ருதய மந்த்ரத்தில் ஜபிக்கப்பட்ட பால் பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். காலை 8.15 மணிக்கு மூலவருக்குத் திருமஞ்சனமும் சஹஸ்ர நாம அர்ச்சனையும் செய்து வைக்கப்படும். பின்னர் பரம பவித்ரமானதும், அங்க ஹீனம் புத்தி ஹீனம் இல்லா குழந்தைப் பேற்றை நல்குவதும், ஸ்ரீமன் நாராயணனுக்கு சமமான தேஜஸ் உள்ள குழந்தைப் பேற்றை சம்பவிக்க வல்லதும் ஆன ஸ்ரீலக்ஷ்மீநாராயண ஹ்ருதய மந்த்ர பாராயணம் செய்விக்கப்பட்டு, குழந்தை சந்தான கிருஷ்ணன் மூர்த்தம் தம்பதிகள் கையில் தரப்படும். அதி சீக்கிரம் குழந்தை பாக்கியம் வேண்டி பெருமாள் தாயாரிடம் நடத்தப்படும் சக்தியுள்ள பிரார்த்தனை இது.

  இந்தப் பிராச்சீனமான திவ்ய க்ஷேத்ரம் வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா நெமிலி ஒன்றியத்தில் பனப்பாக்கத்திற்கு அருகில் உள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து , 17 கி.மீ தொலைவில், பாலுசெட்டிச்சத்திரம், திருப்புட்குழி, தாமல் அடுத்து பனப்பாக்கம் செல்லும் பாதையில்உள்ளது.அரக்கோணம் ரயில் மற்றும் பஸ் நிலையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், வேலூர் பஸ் நிலையத்திலிருந்து 49 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பனப்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

  மேற்கொண்டு விவரம் வேண்டுவோர் 9003177722 / 9383145661 / 9444970066 என்ற எங்களில் தொடர்பு கொள்ளலாம்.

  இன்னும் ஒரு மாதத்தில் ராஜகோபுர திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. நம் வாழ்க்கைக்கும், குழந்தைகளுக்கும், ஏன் முன்னோர்களுக்கும் கூட பரம ஏற்றத்தைத் தரும் இந்த திவ்ய கைங்கர்யத்திற்கு பணமாகவோ, பொருளாகவோ உதவிட வேண்டுகிறோம்.​

  ​​

  தொடர்புக்கான முகவரி:

  Melvenpakkam Sri Lakshmi Narayana Perumal Charitable Trust,

  No.11, 4th Main Road, Ram Nagar, Nanganallur, Chennai-600061.

Copyright © 2015 Sarra Infotech